Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி பிறந்தநாள்; யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

டிசம்பர் 12, 2020 11:30

சென்னை: ரஜினி பிறந்த நாளான இன்று பல இடங்களில் அவரது ரசிகர்கள் யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் கேட்ட வரம் தரும் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் வருடா வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று அரசியலுக்கு வரவேண்டி அவரின் தீவிர ரசிகர் செர்டுபாண்டி என்பவர் அனைவரையும் அழைத்து யாகம் நடத்தி மண் சோறு சாப்பிடுவது வழக்கம்.

இந்த கோயிலில் யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இந்த வருடம் ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்ததால் இன்று யாகம் நடத்தி கடைசியாக மண் சோறு சாப்பிட்டு நிவர்த்தி செய்தார்.

முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும் தமிழ்நாட்டை ரஜினி ஆள வேண்டும் என்றும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் பொது மக்கள் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் பல இடங்களில் முதியோர் இல்லங்களில் நலத்திட்ட உதவிகளும், முதல்வர் ஆகவேண்டி கோவில்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவரது ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்