Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரசிகப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி- ரஜினி டுவிட்

டிசம்பர் 12, 2020 01:54

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை ரசிகர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிய பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்