Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினியால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் அமையும்: அர்ஜூன் சம்பத்

டிசம்பர் 13, 2020 09:08

விழுப்புரம்: இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் விழுப்புரம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இனி ரஜினியின் ஆன்மீக அரசியல் அணியும், அதற்கு எதிராக திராவிட அரசியல் அணியும்தான் இருக்கும். ரஜினியின் ஆன்மீக அரசியலை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

234 தொகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம். எனினும் ரஜினி கட்சியுடன் இந்து மக்கள் கட்சியை இணைக்க மாட்டோம்.

தமிழகத்தில் முறைகேடு மிகுந்த திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஆன்மீக அரசியலுக்கு சாதி, மதம் கிடையாது. அது மக்களுக்கானது. வாக்குக்கு பணம் அளிக்காத ரஜினியின் ஆன்மீக அரசியல் இயக்கம் வெற்றி பெறும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியின் ஆன்மீக அரசியல் அமையும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்