Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் கைது

டிசம்பர் 15, 2020 05:04

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். 

கடந்த ஆறு நாள்களாக ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்று ஹேம்நாத்திடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த இருந்த நிலையில், காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். நேற்று சித்ராவின் தாய், தந்தை, சகோதரரிடம் வருவாய் கோட்டாட்சியர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்