Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

டிசம்பர் 15, 2020 06:30

சென்னை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் புவனேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசை நாளன்று மிக விமரிசையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக இந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் ராமு அமாவாசை ஊஞ்சல் உற்சவம், பொது தரிசனத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் இன்று (டிச. 15) பொதுமக்கள் தடையை மீறி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவருவார்கள் என்பதால் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு தடையை மீறி நடந்துவந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர்.

அமாவாசை தினத்தையொட்டி திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு எண்ணெய் தேன், பால், பன்னீர் கொண்டு சிறப்பு திருமுழுக்கும் செய்யப்பட்டது. பின்னர் அம்மன், புவனேஸ்வரி அலங்காரத்தில் அலங்கரித்து, ஊஞ்சல் ஆட்டினர். இந்த விழாவில் கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்