Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 16, 2020 05:50

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவே பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தற்போது வரை 4 விழுக்காடு அதிகமாக பெய்தாலும் அது இயல்பான அளவாகதான் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவு மழை பெய்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு டிசம்பர் வரை 44.7 சென்டி மீட்டர் மழை கிடைக்க வேண்டும் என்றும், தற்போதுவரை 43.2 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்