Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் கண் மருத்துவமனை திறப்பு விழா; முதல்வர் பழனிசாமி பங்கேற்பு 

டிசம்பர் 16, 2020 10:08

சென்னை: சேலத்தில் தனியார் கண் மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

சேலம், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சேலத்திற்கு சென்றார்.

அங்கு அவரை சேலம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து சேலம் 5 ரோடு பகுதியில் தனியார் (டாக்டர் அகர்வால்ஸ்) கண் மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய முதல்வர், உடல் உறுப்புகளில் கண்ணின் பங்கு மிகவும் முக்கியமானது எனவே பொதுமக்களுக்கு எவ்வித பாரபட்சமும் இல்லாமல் தரமான சிகிச்சைகளை  மருத்துவமனையில் வழங்க வேண்டும் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், செம்மலை மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள்  
என பலர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் மாவட்டத்தில் ரூ. 118.53 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரூ 627 கோடி மதிப்பில் 2089 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், ரூ 35 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்