Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா

டிசம்பர் 16, 2020 11:42

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா தொழில் நிறுவனங்களை துவங்க உள்ளதாக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தொடங்கவுள்ள ஆயத்த ஆடை பூங்கா குறித்து திருப்பூர் தொழில் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.16) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சியை பரவலாக கொண்டு செல்லும் வகையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முதன்முறையாக ஆயத்த ஆடை பூங்கா தொடங்க உள்ளது.

36 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற 29ஆம் தேதி திருப்பூர் தொழில் துறையினர் அணி சார்பாக தையல் பயிற்சி வேதாரண்யத்தில் தொடங்க இருக்கிறது.

முதற்கட்டமாக 36 தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் மூலம் 40 விழுக்காடும், மாநில அரசின் மூலம் 23 விழுக்காடு என 63 விழுக்காடு மானியம் வழங்கப்படும்" என்றார்.

தலைப்புச்செய்திகள்