Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 17, 2020 05:33

சென்னை: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன் தினம் பெய்யத்தொடங்கிய மழையானது நேற்று இரவு முதல் கனமழையாக பெய்யத் தொடங்கியது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தற்போதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார். இன்றைய தினம் கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து முடிவு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்