Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்து; பிரணாப் முகர்ஜி புத்தகத்தை வெளியிட மகன் எதிர்ப்பு

டிசம்பர் 17, 2020 08:13

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தை வெளியிட அவரது மகன் அபிஜித் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய 'The Presidential Years' புத்தகத்தை வெளியிடுவது தொடர்பாக அவரது வாரிசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த வாரம் அந்த புத்தகத்தின் சில பகுதிகளை புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில், 2012ல் தான் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது என்று பிரணாப் முகர்ஜி எழுதி இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தப் புத்தகத்தின் வெளியீடு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரணாப் முகர்ஜியின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி தனது எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி புத்தகத்தை வெளியிடக்கூடாது என்றும் புத்தகத்தை முழுமையாக படித்து கருத்து தெரிவித்த பின்பே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அபிஜித்தின் இந்த பதிவுக்கு அவரது சகோதரி ஷர்மிஸ்தா முகர்ஜி ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார். புத்தகத்தின் இறுதி வடிவத்துக்கு தன்னுடைய தந்தை ஒப்புதல் அளித்து விட்டதாகவும், புத்தக வெளியீட்டிற்குத் தேவையற்ற தடைகளை உருவாக்க வேண்டாம் என்றும் ஷர்மிஸ்தா அபிஜித்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்