Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா: நித்யானந்தா அறிவிப்பு

டிசம்பர் 18, 2020 05:35

சென்னை: கைலாசாவில் தங்கும் மூன்று நாட்களும் இலவச உணவு, தங்குமிடம் போன்றவை வழங்கப்படும் என்றும், கைலாசாவுக்கு வருகை தர விரும்புவோர் தற்போது இருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் நித்யானந்தா அறிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக வீடியோ மூலமாக பேசிய நித்யானந்தா, கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்கள் தங்களின் முழுத்தகவல்களுடன், 3 நாட்கள் இலவச விசாவுக்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

கைலாசா வரவிரும்புவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து ‘கருடா’ என்று பெயரிடப்பட்டு உள்ள சிறிய தனி விமானங்கள் மூலமாக இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் கைலாசாவில் தங்கும் 3 நாட்களுக்கும் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசம் எனவும், மேலும் கைலாசாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப வரும் வரை பயண செலவும் இலவசம் எனவும் கூறியுள்ளார்.

கைலாசாவுக்கு வருகை தருபவர்கள் அனைவரும் மூன்று நாட்கள் மட்டுமே கைலாசாவில் தங்க முடியும். சிவனை வழிபடும் சிவ பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 3 நாட்களில் ஒரு நாள் மட்டுமே நித்யானந்தாவை தரிசிக்க முடியும், ஒரு நாளைக்கு 25 பேர் மட்டுமே கைலாசாவுக்கு வரமுடியும் என்பன போன்ற கட்டுப்பாடுகளையும் நித்தியானந்தா விதித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்