Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 18, 2020 07:49

சென்னை: சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கணக்கெடுப்பு 2021ல் தொடங்க இருக்கிறது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் ஆனந்த பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கும்போது சாதிவாரி கணக்கு ஏன் எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது எனவும் அதனால் இந்த மனுவை ஏற்க முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்