Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.28,000 கோடிக்கு ராணுவ ஆயுதம் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

டிசம்பர் 18, 2020 07:57

சென்னை: இந்திய ராணுவத்திற்கு ரூ.28,000 கோடி மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள், தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில், ரூ.28,000 கோடி மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை 2020-இன் கீழ் நடைபெற்ற முதல் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில், இந்திய தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 

அரசின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'தற்சார்பு இந்தியா' முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மொத்தமுள்ள ரூ.28,000 கோடியில் ரூ.27,000 கோடி மதிப்பிலான பொருட்கள் இந்திய தொழில் துறையிடமிருந்து பெறப்படும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தலைப்புச்செய்திகள்