Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கதேச சுதந்திர தின கொண்டாட்டம்; பிரதமர் மோடி பங்கேற்கிறார்

டிசம்பர் 18, 2020 08:43

சென்னை: வங்கதேச சுதந்திரதின பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி வாயிலாக உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் வங்கதேசம் குறிப்பிடத்தக்க தூணாக இருப்பதாக புகழ்ந்தார்.

பெருந்தொற்று நேரம் கடுமையான சவால்கள் நிறைந்ததாக இருந்தபோதிலும், இருநாட்டு நல்லுறவு நீடித்ததாக மோடி கூறினார். தொடர்ந்து பேசிய ஷேக் ஹசீனா, பெருந்தொற்று நேரத்தில் மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார்.

மேலும் தங்கள் நாட்டு விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை வணங்குவதாகவும் ஹசீனா கூறினார். வங்கதேச சுதந்திர தினமான மார்ச் 26ம் தேதி நடக்கும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி டாக்காவுக்கு வருகை தருவார் என்றும் ஹசீனா கூறினார்.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து சில்லாஹதி- ஹல்திபாரி ரயில் இணைப்பு திட்டத்தையும், டெல்லியில் உள்ள பங்கபந்து-பாபு டிஜிட்டல் கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஷேக் முஜிப்பூர் ரகுமானின் தபால்தலையும் வெளியிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்