Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் -பிரதமர் மோடி அறிவிப்பு

டிசம்பர் 18, 2020 09:54

சென்னை: குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் வேளாண்சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிக்கிறது. வேளாண் சட்டங்கள் வியாபாரிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வகையில் உள்ளது.

வேளாண் சட்டங்கள் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும். விவசாயிகளுக்காக இந்தியா முழுவதும் குளிர்பதன கிடங்குகள் தொடங்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்துறை- விவசாயிகள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வேளாண் சட்டங்கள் கொண்டுவந்ததற்காக நன்றி சொல்ல வேண்டாம். நலமுடன் இருந்தாலே போதும்” என்றார்.

அத்துடன், “விவசாய விலை பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களுக்காக சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையின் பேரில் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தலைப்புச்செய்திகள்