Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்நடை திருட்டு சந்தேகம்; இளைஞரை அடித்துக்கொன்ற கும்பல்

டிசம்பர் 18, 2020 10:08

சென்னை: பீகார் மாநிலம் பாட்னாவில் கால்நடை கொட்டகையில் இருந்து எருமையை அவிழ்த்து விட்ட இளைஞரை, பசுவை திருடுவதாக சந்தேகித்து ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே புல்வாரிஷரிப்பில் கால்நடை திருட்டு சந்தேகத்தின் பேரில், 32 வயது நபர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.

புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஒரு கால்நடை கொட்டகையில் இருந்து முகமது ஆலம்கீர் எருமையை அவிழ்த்து விடுவதை கண்டவுடன், அவர் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போது ஆலம்கீருடன் இருந்த ஒருவர் தப்பித்துவிட்டார்.

பல மணி நேரம் தாக்குதலுக்கு பின்னர் முகமது ஆலம்கீர் புதன்கிழமை பிற்பகல் மருத்துவ மனையில் காலமானார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 6 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

2017 ஆம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் பசுக் காவலர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து  அதிகரித்தது. இதன்பின்னர் பேசிய  பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவங்கள் குறித்து பேசியிருந்தார், பசுக்கள் மீதான பக்தியால் மக்களைக் கொல்வது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்