Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

டிசம்பர் 19, 2020 11:24

திருச்சி : டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 23ம் தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் முடிவெடுக்க பட்டது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கூட்டு இயக்க தலைவர் தனபால் தலைமை வகித்தார்.  தே

சிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தளபதி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 23ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்