Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரியில் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் 

டிசம்பர் 22, 2020 06:30

கிருஷ்ணகிரி: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே திமுக கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் காஞ்சனா கமலநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசைக்கண்டித்தும் கேஸ் விலையை திரும்பப் பெறக் கோரியும் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்  செங்குட்டுவன் மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், நகர செயலாளர் எஸ் கே நவாப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்