Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடனடி குடும்ப அட்டை அசத்திய ஆட்சியர் 

டிசம்பர் 22, 2020 06:31

திருப்பத்தூர் : மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கைக்குழந்தையுடன் கதறி அழுத பெண்ணுக்கு  குடும்ப அட்டையை வழங்கி  மாவட்ட ஆட்சியர் சிவனருள் அசத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் வளாகத்தில் பொதுமக்களின்  மனுக்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். 

அச்சமயத்தில் வாணியம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கு கூலிவேலை செய்யும் சங்கர் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ள சூழ்நிலையில் கணவர் சங்கர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறினார். மேலும் தன்னிடம் இருந்த குடும்ப அட்டையை கூட தன் மாமியார் பிடுங்கி கொண்டதால் தன்னுடைய இரு பெண் குழந்தைகளுக்கு தேவையான உணவை கொடுக்க தன்னால் முடியவில்லை என கூறி கதறி அழுதுகொண்டே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அந்த பெண்ணின் நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் உடனடியாக துறை அதிகாரியை அழைத்து குடும்ப அட்டையை வழங்க ஆணையிட்டார்.

இது போன்ற பல மனுக்களை உடனுக்குடன் விசாரித்து பின்பு மக்களின் குறைகளுக்கு ஏற்ற  துறை சார்ந்த  அதிகாரிகளிடம் விசாரித்து தீர்வு கொடுக்க ஆலோசனை வழங்கினார். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்