Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2021 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு மார்ச் 21-ல் நடைபெறும்

டிசம்பர் 22, 2020 07:30

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக, பிற தேர்வுகளைப் போல 2020 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வும் (All India Bar Exam-XV) பல முறை தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இந்தத் தேதியும் தள்ளி வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகவலை இந்திய பார் கவுன்சில் மறுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ''திட்டமிட்ட தேதியில் 2020 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு நடைபெறும். இனி தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 140 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

அதேபோல 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு (All India Bar Exam-XVI) அதே ஆண்டில் மார்ச் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக டிசம்பர் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி கடைசித் தேதியாகும். பிப்ரவரி 23 வரை கட்டணம் செலுத்தலாம்.

மார்ச் 6 ஆம் தேதி நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அகில இந்திய பார் தேர்வு (All India Bar Exam-XVI) மார்ச் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்