Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சந்தையாக மாறிய தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் விழா

டிசம்பர் 24, 2020 09:11

திருவள்ளூர்: ஆட்டுச்சந்தை போல் காட்சி அளித்த தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம்.

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் விலையில்லா நான்கு ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய பகுதிகளில் 161 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 644 ஆடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

 இதை  செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் தலைமையில்  ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார் கலந்து கொண்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு அதன் காதுகளில் அரசு முத்திரை பொருத்தப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிக பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்ட ஊராட்சியாக செம்பரம்பாக்கம் ஊராட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும்  பயனாளிகளுக்கு ஆடு வழங்கும் திட்டம் நடைபெற்ற இடத்தில் ஆடுகள் குவிக்கப்பட்டதால்  ஆட்டுச்சந்தை நடைபெறும் இடம் போல் காட்சியளித்து.

தலைப்புச்செய்திகள்