Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகை வழிப்பறி வழக்கில் இரண்டு காவலர்கள் உட்பட நான்கு பேர்  கைது

டிசம்பர் 24, 2020 09:13

காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். இவர்  ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 11 ம் தேதி மகேந்திர் மகன் ஆசிஸ், கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமாருடன் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதிக்கு சென்று நகைகளை விற்பனை செய்த்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடைகளுக்கு நகைகளை வினியோகம் செய்ய சென்றனர். திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சேகர் ஆட்டோவை ஓட்டி சென்றார். 

அப்போது ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகை பையை பறித்து சென்றனர். இந்த  சம்பவம் குறித்து  ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த தனிப்படை காவலர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் மானாமதி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்  இரண்டு காவலர்கள் மீது சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை காவல் நிலையத்தில் இருக்கும் பொழுதே தனிப்படை காவலர்கள்  சென்று இரு காவலர்களும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிக்கு சேர இருந்த மாரி , சென்னை ரெட்ஹில்ஸ் என்ற காவலர்களும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ராகுல் மற்றும் ரஞ்சித் இரு வழிப்பறிக் கொள்ளையர்களும் இணைந்து மகேந்திரன் என்பவரை நோட்டமிட்டு 300 சவரன் நகையை கத்திமுனையில் வழிப்பறி செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 368 கிராம் தங்க நகையையும் லட்சக்கணக்கில் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர். காவலர்களே கத்தியை காட்டி நகை வியாபாரியிடம் 300 சவரன் நகை பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்