Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அஞ்சலி

டிசம்பர் 24, 2020 10:19

திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளத்தில், மறைந்த தமிழக முதல்வர்   எம்.ஜி.ஆரின்,  33-ஆவது ஆண்டு "நினைவு அஞ்சலி" நிகழ்ச்சி,  இன்று (டிசம்பர்.24) காலையில்,  ராதாபுரம் தெற்கு ஒன்றிய, அஇஅதிமுக   சார்பில் நடைபெற்றது

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான   ஐ.எஸ். இன்பதுரை பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த,  எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு, மலர்தூவியும், மலர்மாலைகள் அணிவித்தும்,"புகழ் அஞ்சலி"செலுத்தினார். 

அவரைத் தொடர்ந்து, ராதாபுரம்  ஒன்றிய, அஇஅதிமுக  செயலாளர் அந்தோணி அமலராஜா,  மாவட்ட மகளிர் அணி தலைவி  ஜான்சிராணி,  கூடன்குளம் பகுதியின், கட்சி நிர்வாகிகள் சுரேஷ்குமார், துரைச்சாமி , சாமுவேல், லிங்கதுரை உட்பட,  கட்சியின்  "முன்னோடிகள்" பலரும், "மலர்மாலைகள்" அணிவித்து, "மரியாதை" செய்தனர்.

தலைப்புச்செய்திகள்