Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளம் பெண் மரணம்: வரதட்சணை கொடுமையா.? 

டிசம்பர் 24, 2020 10:40

தூத்துக்குடி: இளம் பெண்  இறப்பில் சந்தேகம்  உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கணவர் வீட்டின் முன்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ரகமத்துல்லா புரத்தை சேர்ந்தவர் அபு சுந்தர் மியான்க்கும் பாத்திமா யாஸ்மின் இவர்களுக்கு திருமணமாகி  ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது.  

இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபு சுந்தர்சியான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு  திடீரென இறந்து போன பாத்திமா யாஸ்மினை தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி  அபு சுந்தர்சியான் மற்றும் அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால் வரதட்சணை கொடுமை காக பாத்திமா யாஸ்மின் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், என்று கூறி அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அபு சுந்தர் சியான் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்   தப்பி ஓடிய  குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தலைப்புச்செய்திகள்