Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாமகவினர் முற்றுகை போராட்டம்

டிசம்பர் 24, 2020 10:41

திருநெல்வேலி:  வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவிகிதம்  இட ஒதுக்கீடு கோரி பா.ம.கவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர்  வன்னியர் சமுதாயம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில், 20 சதவிகிதம், இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நெல்லை மாநகராட்சியின் கீழ் உள்ள  திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய   நான்கு  மண்டலங்களின் அலுவலகங்களை பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒரேநேரத்தில், தனித்தனி குழுக்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபோல பத்து பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாகவும் வன்னியர் சமுதாயம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில், 20 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என  போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மண்டல அலுவலகங்களில்,  உதவி ஆணையர்களிடமும், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களிடமும், கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,  அறவழியில் முற்றுகை போராட்டம் நடத்தி, மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில்,  மாநில துணைச் செயலாளர் நெல்லை அன்பழகன், மாநில இளைஞர் அணி துணை தலைவர் அந்தோணிராஜ், மாநகர தலைவர் எட்வின் நம்முடையார், மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜேசீஸ் ஜான், மாநகர் மாவட்ட  தலைவர்  முத்து சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட அமைப்பு தலைவர் மகாராஜன், தொண்டர் அணி செயலாளர் கருப்பசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்