Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது

டிசம்பர் 26, 2020 06:00

சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கனை டிச.31 வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர்.

பொங்கல் தொகுப்பில் 2.10 கோடி ரேஷன் அட்டைக்காரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும். ஒரு முழுக்கரும்பு, நல்ல துணிப்பையுடன் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காயும் தரப்படும்.

தலைப்புச்செய்திகள்