Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாமரை இல்லாமல் ஆட்சி மலராது: சி.பி.ராதாகிருஷ்ணன்

டிசம்பர் 26, 2020 06:36

திருப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையத்தில் பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநில பா.ஜனதா பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தாமரை மலருமா? என்று கேட்டவர்கள் மத்தியில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களின் நலனில் அக்கறையுள்ள இந்த கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. திடீரென மக்கள் நலனுக்காக கிராம சபை கூட்டம் நடத்துவது போல செய்கிறார்கள்.

ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கிராமசபை கூட்டங்களை நடத்த விடாமல் தடுத்தவர்கள் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மத்தியில் பா.ஜனதா தலைமை என்ன கூறுகிறதோ? அதை தமிழகத்தில் பா.ஜனதா செயல்படுத்துகிறது என்பதை அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்