Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸ் பணம் ஒரு லட்சம் அபேஸ்

டிசம்பர் 27, 2020 08:51

சென்னை: சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு ஆய்வாளராக பணியாற்றுபவர் அன்புகரசன். இவர் வாகனத்திற்கு அரசு சார்பில் ஓட்டுநர் நியமிக்கப்படாததால் காவல் ஆய்வாளர் அன்புகரசன், பாலவாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குக் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் நியமித்திருந்தார்.

இந்த சூழலில் மகேஷ் கடந்த ஒரு வாரமாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். பல முறை போனில் தொடர்பு கொண்ட போதும் மகேஷ் போனை எடுக்கவில்லை. இதற்கிடையே அன்புகரசன் தனது கூகுள் பே கணக்கை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது தனது அக்கவுண்டில் இருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதைக் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்ததில் ஓட்டுநர் மகேஷ் பல முறை 10 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் எனத் தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது.

அன்புகரசன் அவ்வப்போது ஓட்டுநர் மகேஷிடம் தனது செல்போனை கொடுத்து கூகுள் பே மூலம் வாகனத்திற்கு டீசல் போடுவது, சாப்பாடு வாங்கச் சொல்வது, ரீச்சார்ஜ் செய்வது போன்ற தேவைகளுக்காக உதவச் சொல்லியுள்ளார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகேஷ் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டியுள்ளார்.

இதையடுத்து மகேஷ் மீது திருவான்மியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்புகரசன் மகேஷை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

தலைப்புச்செய்திகள்