Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லையில் தி.மு.க.வினர் 500 பேர் மீது வழக்கு

டிசம்பர் 27, 2020 09:09

நெல்லை: தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற தலைப்பில் தி.மு.க.வினர் மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று 12 இடங்களில் கூட்டம் நடைபெற்றது.

சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் தலா 2 இடங்களிலும், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், விஜய நாராயணம், தாழையூத்து, நாங்குநேரி, தேவர்குளம், திசையன்விளை உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி கூட்டம் நடைபெற்றது. ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் உறுமன்குளம் ஊராட்சி பெட்டைகுளம் கிராமத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையிலும், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜோன் ஆகியோர் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதையடுத்து போலீசார் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியதாக வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் முழுவதும் தடையை மீறி கூட்டம் நடத்திய சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்