Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்பாண்டங்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை 

டிசம்பர் 29, 2020 08:42

கிருஷ்ணகிரி : மண்பாண்ட தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மண்பாண்டங்களை அரசே கொள்முதல் செய்ய  முன்வர வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நலச் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டதின் போது, தமிழகத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள மண்பாண்ட தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு மண் பானைகள், மற்றும் மண் அடுப்புகளை அரசே கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளிகளுக்கு தடை இன்றி ஏரிகளில் களிமண் எடுக்க அனுமதிக்க  வேண்டும்.

கொரோனா கால கட்டத்தில் தொழில் இன்றி மிகவும் பாதிப்புக்கு உள்ளான  அனைத்து மண்பாண்ட தொழிலாளிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும், வருகின்ற 31-ம் தேதி மண்பாண்ட தொழிலாளிகளின் அடிப்படை தேவைகள் குறித்து சென்னையில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து பெரும் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மேலும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி  அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், முழு கரும்பு கொடுக்கப்படும் என்று அறிவித்து விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்து வருகிறது. 

அதே போல தமிழகத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் மண்பாண்ட தொழிலாளிகளிடம் இருந்து புதுமண் பானை மற்றும் மண் அடுப்புகளை கொள்முதல்  செய்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க அரசு முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த அவசரக் கூட்டத்தின் போது மாவட்ட செயல் தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளார் வெங்கடேசன் மற்றும் அரியப்பன், கோவிந்தராஜ், வாஞ்சி தேவன், கேசவன், விக்ணேஷ், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்,

தலைப்புச்செய்திகள்