Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசுமை வீடு திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு வீடு - மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை 

டிசம்பர் 31, 2020 11:48

திருவண்ணாமலை  : செங்கம் அடுத்த பெரியகுளம் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தமிழக முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பூமி பூஜை செய்து பணி ஆணைகளை வழங்கினார். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரியகுளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 2020-21 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு 1 கோடியே 3 லட்சத்தி 5 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பூமி பூஜை செய்து பயனாளிகளிடம் பணி ஆணைகளை வழங்கினார். 

மேலும் இதில் 23 பயனாளிகளுக்கு சிமெண்ட் சாலை, இரண்டு ஆட்டு கொட்டகைகள், இரண்டு மாட்டுக் கொட்டகைகள், சிறு மின்விசை பம்பு ஆகிய அடிப்படை வசதிகளுடன் இத்திட்டத்தின்கீழ்  பெரியகுளம் பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு நேரில் சென்று அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பணி ஆணைகளை வழங்கினார்.  

இதில் ஒன்றிய கவுன்சிலர் சூரியலட்சுமி சங்கர் மாதவன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சீனிவாசன், மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்த், வட்டாட்சியர் மனோகரன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்தியமூர்த்தி என துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்