Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வன்னியர்  இடஒதுக்கீடு - பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 31, 2020 11:54

திருவண்ணாமலை : செங்கம் ஒன்றிய அலுவலகம் அருகே வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்று அறவழி போராட்ட ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனுவை ஒன்றிய ஆணையாளரிடம் வழங்கினார்கள். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெங்களூர் சாலைகளில் உள்ள ஒன்றிய அலுவலகம் அருகே ஒன்றியத்தில் உள்ள பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் திரளாக பங்கேற்று வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு அறவழிப் போராட்ட ஆர்ப்பாட்டம். பாமக மாநில உழவர் பேரியக்கம் தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பாமக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்தியமூர்த்தி அவர்களிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இதில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குணசீலர்பூபதி, தட்சிணாமூர்த்தி, ஜோதி, முத்து, சுரேஷ், ரமேஷ், சங்கர்மாதவன், வழக்கறிஞர் சம்பத், வழக்கறிஞர் பவன்குமார், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், சரவணன், சுரேஷ், முரளி என ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்