Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 

ஜனவரி 01, 2021 09:51

ஈரோடு : 2021 ம் ஆண்டினை ஒட்டி  மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு நள்ளிரவு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் விவசாய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்ட  சார்பில் சோஷியல் டெமாக்ரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மெழுகு வர்த்தி ஏந்தி இருளில் தவிக்கும் தமிழக விவசாயிகளை மீட்கக்கோரும் விதமாக நூதன நள்ளிரவு போராட்டம் நடைபெற்றது. 

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தலைவர் லுக்மான் தலைமை வகித்தார். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் பர்கான் அகமது  குறிஞ்சி பாட்ஷா ஆகியோருடன் எஸ்டிபியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ அப்துல் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பர்சூல் ரஹ்மான், மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் ஷிராஜித், கிழக்கு தொகுதி செயலாளர் ஜமால், பொருளாளர் சிராஜ்தீன் ஆகியோருடன் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது  புதிய விவசாய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாரதிய ஜனதா கட்சியை கண்டித்தும் அக்கட்சியினர் புதிதாய் 2021 ம் ஆண்டின் துவக்கநாளின் நள்ளிரவில்  கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி நூதன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல நெல்லை மாநகராட்சியின் கீழ் மொத்தமுள்ள 55 வார்டுகளிலும், ஒரே நேரத்தில், இந்த மெழுகுவர்த்தி போராட்டம் நடைபெற்றது. மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு,  மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ. கனி,  துணைத்தலைவர் கே.எஸ்.சாகுல் அமீது உஸ்மானி ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். 

போராட்டத்தில்,  கட்சியின், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி தலைவர் புகாரி, செயலாளர் சலீம்தீன் உட்பட, திரளானோர்  கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோஷம் போட்டனர். 

பாளையங்கோட்டை பகுதி நூற்றாண்டு மண்டபம் அருகில்  நடந்த போராட்டத்தில், கட்சியின் மாநகர் மாவட்டப் பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது, மாவட்டச்செயலாளர் பர்கிட் அலாவுதீன், பகுதி தலைவர் அரசன் சேக், செயலாளர் அப்துல் மஜீத் ஆகியோருடன், பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்