Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி - முதல்வர் அதிரடி 

ஜனவரி 01, 2021 10:13

திருச்சி : அதிமுக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் தெரிவித்தார்.

வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் நேற்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். 

இதனை தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மற்றும் திருவெறும்பூர்  ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து திருச்சி ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என ஏற்கனவே முனுசாமி கூறிவிட்டார். ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதோ, அந்த கட்சிகள் தற்போதும் இருக்கிறது. புதிதாக வேறு கட்சிகள் இணைவது தேர்தல் நேரத்தில் தான் தெரியும் என்றார். 

சசிகலா வெளியே வந்த பிறகு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், பாஜக தற்போது வரை எங்கள் கூட்டணியில் இருப்பதாக தான் கூறுகிறார்கள். ஜெயலலிதா இறந்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் மேலும், நாட்கள் குறைவு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்பதால் பல இடங்களுக்கு செல்வதால் துவக்கி விட்டோம்.  ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு தேர்தலில் வெற்றி பெற கூட்டணிகள் அமைக்கப்படுகிறது. 

அரசியல் இருக்கும் வரைக்கும் சாகும் வரையும் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றும், வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்றும் தெரிவித்தார். 
மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர்  போட்டியிட்டு திமுகவை காப்பாற்றுவதை முதலில் பார்க்கட்டும் என்றார். பெரும்பான்மை இடங்களில் மக்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள். 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி உறுதியாகும். உட்கட்சி  பூசல் என்பது அ.தி.மு.க வில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது என கூறினார்.

தலைப்புச்செய்திகள்