Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாமக சார்பில் காலண்டர் விநியோகம் 

ஜனவரி 01, 2021 10:14

செங்கம்: செங்கம் அடுத்த முன்னூர்மங்கலத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு பாமகவினர் காலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் முன்னூர்மங்கலத்தில்  பாமக கிளை செயலாளர் மணிகண்டன் தலைமையில் குடியிருப்பு வாசிகளுக்கு நாள்காட்டி காலண்டர்  வழங்கப்பட்டது. 

மேலும் பாமக சார்பில் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் இரா.மதியழகன், ஜேசி.பிசுரேஷ், விநாயக மூர்த்தி, திருமலை, கிருஷ்ணன், வெற்றிவேல், ரவிச்சந்திரன், ஏழுமலை, மணிகண்டன், பவன்குமார், மணிமாறன்,  செந்தில்குமார் மற்றும் இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்ட பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்