Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிய வளர்ச்சி வங்கி: கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது இந்தியா 

ஜனவரி 02, 2021 05:08

புதுடெல்லி: அசாமில் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக 231 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்தியா 2020 கையெழுத்திட்டது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத் திட்டத்தின் பொறுப்பு அதிகாரி திரு. ஹோ யுன் ஜியோங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தோட்டக்கலை விரிவாக்கத்திற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்தியா கையெழுத்திட்டது.

இதன் மூலம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களின் வருவாயை தோட்டக்கலை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத் திட்டத்தின் பொறுப்பு அதிகாரி திரு. ஹோ யுன் ஜியோங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தலைப்புச்செய்திகள்