Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பர்கூர் அருகே ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை - ராஜேந்திரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

ஜனவரி 03, 2021 10:17

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே பாலிநாயனப்பள்ளி ஊராட்சியில் சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலிநாயனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பிராதான சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் சாலையில் செல்பவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பொதுமக்களின் முக்கிய சாலையாக இருந்து வரும் சாலையை தார்சாலையாக மாற்றப்பட வேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநில நிதிக்குழு திட்டத்தின் மூலமாக சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அதற்கான தார்சாலை அமைப்பதற்கான துவக்க விழா  நடைபெற்றது. செட்டிப்பள்ளி கூட்டு ரோட்டில் இருந்து மாரியம்மன் கோவில் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும்  பணியை பர்கூர் அதிமுகசட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜைகள் செய்து  துவக்கி வைத்தார். 

இதன் மூலம்  பாலிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு  உட்பட்ட பல்வேறு கிராம மக்கள் பயன் பெறும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.  விழாவின் போது மாவட்ட அவைத் தலைவர் பெருமாள் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், வரட்டனபள்ளி கூட்டுறவு சங்கத் தலைவரும்  மாணவரணி மாவட்ட செயலாளருமான வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் முரளி மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் தூயமணி உள்ளிட்ட கிராம மக்கள்  பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்