Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் பயிற்சி செவிலியர்களுக்கு கொரோனா தடுப்பூசி 

ஜனவரி 03, 2021 10:32

திருநெல்வேலி : பயிற்சி செவிலியர்களுக்கு, சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும், கொரோனா  தொற்று பரவலை, முற்றிலும்  தடுப்பதற்காக, மொத்தம் 17 மையங்களில், சோதனை அடிப்படையில் கோவி ஷீல்டு  என்னும் பெயரிலான தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
 
அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை சமாதானபுரம், நகர் நல மையம் மற்றும் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில், ஒவ்வொரு மையத்திலும் 25 பயிற்சி செவிலியர்கள் என 3 மையங்களிலும் சேர்த்து மொத்தம் 75 முன் களப் பணியாளர்களுக்கு, இந்த  தடுப்பூசி போடப்பட்டது. 

ஊசி போடுவதற்கு முன்னர், அவர்கள் அனைவருக்கும், உடல் வெப்பநிலை,  கணணிப்பதிவு தகவல், அடையாள அட்டை விபரம் போன்றவை சரிபார்க்கப்பட்டன. ஊசி  போட்ட  பின்னர், 30 நிமிடங்கள், சமூக இடைவெளியில், காத்திருப்பு அறையில், அவர்கள் அமரவைக்கப்பட்டு, ஒவ்வாமை குறித்து அறியப்பட்டது. பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பது  உறுதி செய்யப்பட்ட பிறகு,  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அப்போது, 28 நாட்கள் இடைவெளியில் மீண்டும்,  2-ஆவது முறையாக, தடுப்பூசி போடப்படும் என்று,  கூறப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் வரதராஜன் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர், இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

தலைப்புச்செய்திகள்