Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை 

ஜனவரி 04, 2021 09:51

தேனி: தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கட்டுபாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள நிலையில் கும்பக்கரை அருவியில்  சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் இடமாகும்.

மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் அதிக அளவில் வந்து குளித்து செல்வார்கள். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 

இந்நிலையில் நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில்  தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலாதலமான குற்றாலம், ஒகேனக்கல் உள்ளிட்ட அருவிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிவழங்கிய நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதித்துள்ளனர் வனத்துறையினர். 

இந்நிலையில்  கும்பக்கரை அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்ப்ட்டுள்ளதால் கும்பக்கரை அருவிக்கு வந்த நிலையில் அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே  மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து தேவதானபட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜாவிடம் கேட்ட போது கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கிய உடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்