Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருடிய காரில் பெட்ரோல் இல்லாமல் சிக்கிய திருடர்கள் 

ஜனவரி 04, 2021 09:54

சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே காரை திருடிக் கொண்டு சென்ற போது பெட்ரோல் தீர்ந்து போனாதால் திருடர்கள் கையும் களவுமாக காவல்துறையினரிடம் சிக்கி கொண்டனர்.சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் காருடன் 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டு இருந்தது.
 
அப்போது அவ்வழியாக சென்ற அம்பத்தூர் துணை ஆணையர் தனிப்படை குழு அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அதிலிருந்த ஒருவன் தப்பி சென்றான்.பின்னர் அங்கிருந்த மற்ற நான்கு பேரை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோதரன், தினேஷ், அசோக், அருண்பாண்டியன் மற்றும் தப்பி ஓடியது சூர்யா என்பதும் தெரிய வந்தது. 

மேலும் தாமோதரன் கொலை குற்றவாளி என்பதும் ஐந்து பேரும் குன்றத்தூர் அருகே கோவுரில் மது அறிந்துவிட்டு வரும் போது அருகே லோகேஷ் என்பவருக்கு சொந்தமான ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் இருந்து காரை  திருடி கொண்டு தப்பி சென்ற போது காரில் பெட்ரோல் தீர்ந்ததால் 400 அடி சாலையில் நின்றது தெரிய வந்தது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் காவல்துறையினர் சிக்கிய திருடர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்