Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் 

ஜனவரி 04, 2021 10:04

திருநெல்வேலி: தமிழக  கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின், மாநில அளவிலான செயற்குழு கூட்டம், திருநெல்வேலி வேயந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு  மாநில தலைவர் நெல்லை எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பேச்சியப்பன், அனைவரையும் வரவேற்று பேசினார். 
கூட்டத்தில் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும், திருமண உதவித்தொகையினை, 50 ஆயிரமாக உயர்த்தி, ஆண்- பெண் என்று வித்தியாசம் பாராமல், அனைவருக்கும் ஒரேமாதிரியாக வழங்கிட வேண்டும்.  

திருமணம் ஆகாத பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு, தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கிட வேண்டும்.  ஆண் கட்டுமான  தொழிலாளர்கள், வேலைக்கு சென்று வருவதற்கு வசதியாக, மானிய விலையில், இருசக்கர வாகனங்கள், வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் இயற்கை 
மரணம் அடைந்தால், 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் உட்பட, மொத்தம் 13  தீர்மானங்கள், இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்திற்கு சென்னை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், விருதுநகர் மாவட்ட துணை தலைவர் ராமர்,  அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின், திருநெல்வேலி மாவட்ட  தலைவர் உலகநாதன், விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் சுவாமி, 
சென்னை மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.  கூட்ட நிறைவில், மாநில  நிர்வாகக்குழு உறுப்பினர் துரைப்பாண்டி, அனைவருக்கும் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்