Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பர்கூரில் பொங்கல்  பரிசு திட்டத்தை சி.வி ராஜேந்திரன் எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்

ஜனவரி 04, 2021 10:20

கிருஷ்ணகிரி : குடும்ப  அட்டைதாரர்களுக்கு  பொங்கல்  பரிசாக ரூபாய்  2500 மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களை பர்கூர்  சட்டமன்ற உறுப்பினர் சி.வி ராஜேந்திரன்  பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பொங்கல் பண்டிகையை கிராம மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 மற்றும்  முழு கரும்புடன் சர்க்கரை, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, எலக்காய் உள்ளிட்ட  பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தகம் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள  ரேஷன் கடையில் பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 மற்றும் முழுக்கரும்பு, சர்க்கரை, அரிசி, முத்திரிப்பருப்பு, எலக்காய் உள்ளிட்ட பொருட்களை  வழங்கினார். இதேபோல்  சின்னமட்டாரப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு நியாயவிலை கடைகளில்  நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

இதில் அவைத் தலைவர் பெருமாள், வரட்டணப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவரும்  மாவட்ட மாணவரணி செயலாளருமான வெற்றிச்செல்வன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன்  ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெங்கடேஷன், ரங்கநாதன் உள்ளிட்ட  பலர் கலந்துக் கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால்  வழங்கப்பட்ட பொங்கல் பரிசுகளை பெண்களும், ஆண்களும் மகிழ்ச்சியுடன்  வாங்கி சென்றனர்.

தலைப்புச்செய்திகள்