Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரொனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

ஜனவரி 05, 2021 07:58

புதுடெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போடும் பணியை விரைவில் தொடங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இது சம்பந்தமாக எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா கூறும்போது, தற்போது 2 மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக இவற்றை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தொடங்கி இருக்கிறோம்.

முதலாவதாக 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்து இருக்கிறோம். அதில் குறிப்பிட்ட நபர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும். அந்த வகையில் 5 முதல் 6 கோடி டோஸ் தடுப்பூசிகள் முதலாவதாக கொள்முதல் செய்யப்படும். அவற்றை உடனடியாக அவர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று கூறினார்.

மருந்துகளை கொள்முதல் செய்து பாதுகாப்பாக வைப்பதற்காக இந்தியா முழுவதும் 31 இடங்களை தேர்வு செய்து வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.முதலில் மருந்து அங்கு கொண்டு வரப்படும். இத்துடன் நாடு முழுவதும் 29 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மருந்து மையங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கு முன்பாக மருந்துகள் அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன் பிறகு ஒவ்வொரு இடத்திற்கும் பிரித்து அனுப்பப்படும்.தேவைக்கேற்ப மையங்கள் அதிகரிக்கப்படும்.மருந்து செலுத்துவது தொடர்பாக இதுவரை 700 மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறார்கள். மருந்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 2 கோடி பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் முதல்கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ள 30 கோடி பேரில் ஆபத்தானநிலையில் உள்ளவர்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது. 1.1.1971-ந் தேதிக்கு முன்னர் பிறந்த அனைவருக்கும் தடுப்பூசி முன்கட்டமாக
போடப்படும்.

தலைப்புச்செய்திகள்