Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவேக்சின் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை வாங்க பிரேசில் நிறுவனம் முடிவு

ஜனவரி 05, 2021 12:31

புதுடெல்லி: ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு  எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளன.கோவேக்சின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசிக்கு சமீபத்தில் மத்திய அரசு அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்குகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் தடுப்பூசியை வாங்க பிரேசிலை சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரேசிலை சேர்ந்த தனியார் மருத்துவமனை சங்கம் பாரத்பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், முதல் கட்டமாக 50 லட்சம் தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கோவேக்சின் தடுப்பூசி அனுமதி குறித்து அரசிடம் பேசி வருவதாகவும், பிரேசில் தனியார் மருத்துவ மனை சங்கம் தெரிவித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசு அனுமதித்த பிறகே தனியாருக்கு கொடுக்க முடியும். அதேபோல் பிரேசிலில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டாலும் அந்நாட்டு அரசு அனுமதிக்கு பிறகே தடுப்பூசியை பயன் படுத்த முடியும். பிரேசில் அரசு, தடுப்பூசி வழங்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்