Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழைக்கு ஒதுங்கியவர் மரம் விழுந்து பலி 

ஜனவரி 06, 2021 11:55

கடலூர்: மழைக்காக மரத்தின் கீழ் ஒதுங்கியவர் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

 
இந்நிலையில் கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த குமரன் என்பவர் தான் பணிபுரியும் கிருமாம்பாக்கம் தனியார் தொழிற்சாலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மழையின் காரணமாக கடலூர் பாண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆள்பேட்டை அருகே உள்ள ஒரு மரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கியுள்ளார்.

கனமழையின் காரணமாக மரம் வேருடன்  குமரன் மீது சாய்ந்ததால் குமரன்  தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.  தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி  குமரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்