Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யத்தில் ரூ.24 கோடியில் துணை மின்நிலையம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்

ஜனவரி 06, 2021 12:00

நாகை : வேதாரண்யத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 110 கிலோ வாட் துணை மின்நிலையத்தில் சோதனை  ஓட்ட செயல்பாட்டை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்.


நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 110 கிலோ வாட் துணை மின்நிலையத்தில் சோதனை ஓட்ட செயல்பாட்டை கைத்தறித்துறை அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள், ஊழியர்கள், கிராம மக்கள் உள்ளிட  அதிமுகவினர் பலர்  கலந்து கொண்டனர்.

இந்த துணை மின்நிலையத்தால் புயல், இயற்கை சீற்றம் என எந்த பாதிப்பு 
வந்தாலும் ஒரே நாளில் சரி செய்யப்பட்டு மின்வினியோகம் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்