Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கரும்பு அறுவடை - பொதுமக்கள் வாங்கி பயன் பெற அழைப்பு 

ஜனவரி 07, 2021 01:26

திருச்சி : மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை வாங்கி பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையின் வளாகத்தில் அமைந்துள்ள சிறைத்தோட்டத்தில் 24 ஏக்கரில் மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா போன்ற மரங்களும், தக்காளி, கத்தரிக்காய், பூசனைனக்காய், முன்ளங்கி, பீன்ஸ், அவரக்காய், புடலங்காய், பரங்கிக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளது. 

இதில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் கரும்பு பயிரிடும் பணி திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத்தலைவர் கனகராஜ் தலைமையில் கரும்பு பயிரிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில் வருகின்ற பொங்கல் விழாவினை முன்னிட்டு இன்று கரும்பு அறுவடை செய்யும் பணி தொடங்கப்பட்டது.

சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் பொதுமக்களின்  நலன்கருதியும் மொத்தமாகவும், சில்லரையாகவும் கரும்புகளை இச்சிறையின் வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் பெற்று பயன் பெற சிறைத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட சிறை அங்காடியில் கரும்பு விற்பனை செய்வது இது மூன்றாம் முறையாகும். தொடர்ந்து 2017, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் திருச்சி மத்திய சிறையின் தோட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

தலைப்புச்செய்திகள்