Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் வேல் யாத்திரையால் மாபெரும் புரட்சி எழுந்துள்ளது

ஜனவரி 08, 2021 08:53

திருச்சி : சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை இளைஞர் சங்கமம் என்ற தலைப்பில் நடைபெறும்  இளைஞரணி மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் தாமரை இளைஞர் சங்கமம் என்ற தலைப்பில்  இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி  நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும்  பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி. செல்வம் ஆலோசனைக்கூட்டத்தை  நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாகதிருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  கலந்து கொண்டார்.  முன்னதாக அவர்   செய்தியாளர்களிடம் கூறும்போது... தமிழகத்தில் வேல் யாத்திரையால் மாபெரும் புரட்சி எழுந்துள்ளது. அதிலும் வேல் யாத்திரையின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தமிழக  அரசு தைப்பூசத் திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது என்றார்.

வேல் யாத்திரை மூலம் திராவிட கட்சிகளின் பொய்களையும் ஸ்டாலினின்  முகத்திரைகளையும் கிழிக்க மக்கள் தயராகிவிட்டனர் என்றார்.  மேலும் அவர் கூறும்போது, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சட்டமன்றம் கட்டுவதற்கு பல்லாயிரம் கோடி செலவிட்டார். அப்போதும் விவசாயிகளுக்கு நிறைய தேவைபட்டது. 


தற்போது ஸ்டாலின், மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட நிதி ஒதுக்கி தேவையற்ற என மத்திய அரசை கேள்வி கேட்பதையே வேலையாக வைத்து கொண்டு மக்கள் நல பணிகளில் எதிலும் ஈடுப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். வருகின்ற பிப்ரவரி 6ம் தேதி பாஜக மாநில இளைஞரணி சார்பாக இளைஞர் எழுச்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு பாஜகவின் முதல் தேர்தல் பிரச்சாரமாக இருக்கும் என்றார்.  இந்த இளைஞர் அணி மாநாட்டிற்கு பிரதமர்  நரேந்திர மோடியை சிறப்பு அழைப்பாளராக அழைக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்