Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா விடுதலை அதிமுகவை  பாதிக்காது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஜனவரி 08, 2021 09:10

சென்னை : சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், சசிகலா விடுதலையாவதற்குள் 100 தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் முடித்திருப்பார் எனவும்  திருநின்றவூரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்தார்

.சென்னை அடுத்த திருநின்றவூரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  அக்கட்சிகளிலிருந்து விலகி தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

பின்னர் அவர்களிடம் பேசிய அமைச்சர் புதிதாக  கட்சியில் இணைந்தவர்கள் பாலில் கலந்த சக்கரை போன்று கட்சிக்கு இனிமையாக இணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும்போது... விஜய் மற்றும்  சிம்பு கேட்டுக்கொண்டதற்காக திரையரங்கில் 100% இருக்கை அனுமதிக்க வில்லை. அவர்களின் கோரிக்கை  கேட்டுக்கொண்டு முதல்வரே முடிவெடுத்தார்.

மத்திய அரசின் அறிவுரையை முதல்வர் தீவிரமாக ஆராய்ந்து நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். சசிகலா வருகை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 
அதிமுக எக்ஸ்பிரஸ்  வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதில் யாருடைய தாக்கமும் ஒன்றும் செய்ய முடியாது என்றார். மேலும் ஜனவரி 27 ல்  சசிகலா வருவதற்குள் முதல்வர் 100 தொகுதிகளுக்கு  மேல் பிரச்சாரம் செய்து முடித்து விடுவார் என்றும்  தங்கள்  நோக்கம் மக்கள் தான் எனவே ஏதும் திசைதிருப்ப முடியாது என தெரிவித்தார்.

 அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது  குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும், இதுகுறித்து முதல்வர் மூலம் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும், அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.  தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் துணை முதல்வர் முடிவெடுப்பார்கள் எனவும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் எந்த தயவு தாட்சனியமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, இதில் அரசின் தலையீடு இல்லை எனவும், ஊழல் பற்றி திமுக பேசுவது பொதுமக்களிடையே நகைப்பிற்குறிப்பியதாக உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்