Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொசுக்கடியால் அரசு ஊழியர்கள் அவதி

ஜனவரி 08, 2021 10:26

திருநெல்வேலி  : ஆட்சித்தலைவர்  அலுவலக வளாகத்தில், கொசுக்கடி காரணமாக  அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த சாரல் மழையின் திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், அந்த வளாகத்தில்   உள்ள, மற்ற துறைகளுக்கான அலுவலகங்களிலும், புல்பூண்டுகள் பெருமளவில் முளைத்திருக்கின்றன.

இந்த புல் பூண்டுகளில், நாள்தோறும்  உற்பத்தியாகும்  கொசுக்கள்  அலுவலகங்களிலும், பணிபுரிந்து வரும் பணியாளர்களை பகல் நேரங்களிலும் கடித்து வருகிறது.  இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஊழியர்கள்

தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திருநெல்வேலி  மாநகராட்சி ஆணையாளருக்குத், தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும், வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது. புல் பூண்டுகளை, வேரோடு அப்புறப்படுத்திடவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்